-
மேஷம்
மேஷம்: காலை 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஇறுக் கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக் கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
-
கன்னி
கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: காலை 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: காலை 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
மகரம்
மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
-
மீனம்
மீனம்: காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவுக் கிட்டும். தடைகள் உடைபடும் நாள்.
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
Home »
» இன்றைய ராசிபலன் (1.11.2016)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...