பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்
நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.
மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பின் கல்வி மாவட்ட
அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று
வெற்றி பெரும் மாணவ - மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில்
பங்கேற்கின்றனர்.
நிதிஒதுக்கீடு: குறுவட்ட
அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து
300ம், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83
ஆயிரத்து 50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு
ரூ.2 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல்
மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.2
கோடி 16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்
நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே 96
லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...