தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்க தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) சார்பில் தேசிய அளவில் அறிவியல்விழிப்புணர்வு, திறனறித் தேர்வு கள் ஆண்டுதோறும் நடத்தப்படு கின்றன.இதில் முதல்கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர்.தொடர்ந்து, வரும் ஜனவரியில் இவர்களுக்கு மாநில அளவில் 2 நாள் அறிவியல் செய்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். அப்போது 120 பேரில் 18 பேர் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசு,சான்றிதழ் வழங்கப்படும்.
பிறகு, அதில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான திறனறி பயிற்சி முகாமுக்கு அழைக்கப்படுவர். முகாம் முடிவில் தேசிய அளவில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 'இமாலயன்' விருது, ரொக்கப் பரிசு ஆகியவை குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். இத்தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால், தேசிய அளவில் இதுவரை அதிக பட்சமாக 25 ஆயிரம் பேர், தமிழக அளவில் அதிகபட்சமாக 1,200 பேர் மட்டுமே இத்தேர்வுகளை எழுதியுள்ளனர். ஆனால்,தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந் துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின் றனர். அதிகபட்சமாக பல்லடத்தில் உள்ள ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி யைச் சேர்ந்த 416 மாணவர் கள் இத்தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளனர். பள்ளிகள் இல்லா மல் தனிப்பட்ட முறையில் சுமார் 800 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் பாதி பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக இத்தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப் படும். இந்த முறை தமிழ் உள்ளிட்ட சில மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து அறிவியல் திறனறிதல் தேர்வுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், கூறியதாவது: விண்ணப்பங்கள் இம்முறை அதிக அளவில் வந்ததற்கு, சில பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.
தமிழகத்தில் இம்முறை விண்ணப்பித்துள்ளவர்களில் 40 சதவீதம் பேர் தமிழ் மீடியம் மாணவர்கள். விண்ணப்பித்த அனைவருக் கும் அப்துல் கலாமின் 'எனக்கான குறிப்புகள்', 'அறிவியல் வளர்ச் சிக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்கு' என்ற 2 ஆங்கில நூல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எதிர்பாராத எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்ததால் வினாத்தாள் தயாரிப்பு, புத்தகங் கள் அனுப்புதல் உள்ளிட்ட பணி கள் தாமதமாகிறது. அதனால், நவம்பர் 13-ம் தேதி நடக்க இருந்த தேர்வு 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாணவர் களுக்கான மாதிரி வினாத்தாள்கள் vvm.org.in என்ற இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை தமிழ்ப் படுத்தி வெளியிட அவகாசம் இல்லாததால் தமி ழாக்கத்தை இணையத்தில் மட்டும் வெளி யிட்டுள்ளோம். அடுத்தமுறை தமிழிலேயே புத்தகங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...