கடந்த வாரத்தில், ஏர்டெல் நிறுவனம் தனது அதிவிரைவு இழை இணைய
தொழில்நுட்பம் ஆன வி-ஃபைபர் தொழில்நுட்பத்தை அறிவித்து தலைப்பு செய்திகளை
கிளப்பியது.
உடன் இந்த இருக்கும் ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டமானது
வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் இருந்து
மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் பிராட்பேண்ட் சேவையைப் போலவே ஏர்டெல்
வி-பைபர் சேவையும் மூன்று மாத கால இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகள்
(உள்ளூர் மற்றும் வெளியூர் இரண்டும்) மற்றும் இணையம் ஆகியவைகளை உள்ளடக்கி
வருகிறது.
அடிப்படையில் ஒரு அதிவிரைவு இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு ஒரு
வெக்டரைசேஷனுக்கு மற்றும் ஃபைபர் தொழில்நுட்பம் கலவையாக ஏர்டெல் வி-பைபர்
உள்ளது.
அப்படியாக ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் சேவை மற்றும் ஏர்டெல் வி-பைபர் சேவை
ஆகிய இரண்டிற்க்கும் உள்ள 5 முக்கியமான வேறுபாடுகள் என்ன என்பதை பற்றிய
தொகுப்பே இது.!
ரிலையன்ஸ் ஜியோ ஜிகார்பைபர் வேகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் தொகுதி
சார்ந்த திட்டங்கள் என்று இரண்டு வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு
இருக்கும். அதன் சேவைகள் ரூ.500 முதல் ரூ.5000/- வரையிலாக உள்ளது. ஏர்டெல்
வி-பைபர் சேவையானது ரூ.999/-ல் தொடங்கி ரூ.4,999/- வரையிலாக உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
வேகம்
பிராட்பேண்ட் சேவை வேகம் என்று வரும் போது, ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர்
சேவையானது 1 ஜிபிபிஎஸ் வேகம் வரை வழங்க வாய்ப்பு உள்ளது இதுவொரு நல்ல
வாய்ப்பு போல் தெரிகிறது.
மறுபுறம், ஏர்டெல் வி-பைபர் தொழில்நுட்பம் 100
எம்பிபிஎஸ் வேகம் வரை வழங்கிறது. ஆனால் நாளைடைவில் ஜியோவில் வேககுறைபாடு
ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச மற்றும் வரம்பற்ற :
இலவச மற்றும் வரம்பற்ற :
இலவச மற்றும் வரம்பற்ற சலுகைகள் என்ற அடிப்படையில், ரிலையன்ஸ் ஜிகாபைபர்
திட்டம் 90 நாட்களுக்கு வரம்பற்ற மற்றும் இலவச இணைய பயன்பாடு கொடுக்கிறது.
அதேபோல், ஏர்டெல் வி-பைபர் பயனர்கள் மூன்று மாதங்களுக்கான நாடு முழுவதும்
உள்ள எந்த நெட்வொர்க் உடனும் இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகளை
கொடுக்கிறது.
நம்பகமான இணைப்பு :
இரண்டு சேவைகளுமே பைபர் தொழில்நுட்பம் சார்ந்த பிராட்பேண்ட் சேவைகளை
திட்டங்கள் ஆகும் மற்றும் பல இலவசங்களை வழங்கும் அதிவிரைவு இணைய வேகம்
கொண்ட சேவைகள் ஆகும், இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த
சேவைகளை கொண்டு பயனர்கள் குறைந்த பப்பரிங்கில் வேகமாக பதிவிறக்கங்கள்,
மற்றும் நம்பகமான இணைப்பு உலாவுதல் ஆகியவைகளை அனுபவிக்க முடியும்.
திருப்தி :
ஏர்டெல் வி-பைபர் சேவை தேர்வு செய்யும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1000/-
செலுத்தி சேவையை பெற முடியும். சேவையில் திருப்தி இல்லை என்றால் ஒரு மாத
கால பயன்பாட்டிற்கு பின்னர் அவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...