அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு
சென்னை மாவட்டத்தில் உள்ள 14 மையங்களில் அக்டோபர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை)
நடைபெற உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு போட்டி எழுத்துத் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதனால் இந்தத் தேர்வு நடைபெறும் மையத்துக்குள் தேர்வர்கள் செல்லிடப்பேசி, இதர உபகரணங்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மேலும், காவல் துறை, அலுவலர்கள் ஆகியோரின் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
இதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்தச் சீட்டில் புகைப்படம் பதியவில்லையென்றால் இணைப்பு படிவத்தை நிறைவு செய்து புகைப்படம் ஒட்டப்பட்டு அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று எடுத்து வருவது அவசியம் ஆகும்.
இந்தத் தேர்வு மேலே குறிப்பிட்ட நாளில் 14 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் அனைவரும் தவறாமல் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வரவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றவும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...