Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

         அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது.

       அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை கடந்த 2014-இல் டிஆர்பி வெளியிட்டது.அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தச் சிக்கலுக்கு தற்போது தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் பணியிடத் தேர்வை டிஆர்பி மீண்டும் வெளியிட்டு விண்ணப்பங்களை வரவேற்றது. இம்முறை விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
எழுத்துத் தேர்வு மூலம் இந்த நேரடி நியமனம் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வானது வரும் 22 -ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை டிஆர்பி இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்ற பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 32 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் டிஆர்பி வெளியிட்டுள்ளது.




1 Comments:

  1. I applied for TN TRB Government ENGINEERING COLLEGE ASSISTANT PROFESSORS WRITTEN TEST to be held on October 22, 2016.

    EXAM CENTRE I mentioned in the application is MADURAI.

    BUT in Hall ticket EXAM CENTRE entered as Thanjavur.

    TRB CHENNAI official said " WE CAN'T CHANGE CENTRE, U SHOULD GO TO THANJAVUR ".

    FRIENDS, ANYBODY HAVING THIS PROBLEM?

    THEN WHY TRB asks in application form to fill up EXAM CENTRE.

    Many people like me will face difficulty.

    We want to change centre to MADURAI / where they applied.

    Give idea. Share to your friends.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive