தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் செயல் வழிக் கற்றல்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும்,
பல்வேறு செயல்கள் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக
கல்வி உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் என்ற பதவிகள்
உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்வழிக் கல்வி முறையாக
கற்பிக்கப்படுவதைக் கண்காணிப்பது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக தற்போது பொம்மலாட்டம் மூலம்
மாணவர்களுக்கு நல்லொழுக்கக் கல்வியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முதல் கட்டமாக மாவட்ட அளவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நேற்று முதன்மை கல்வி அலுவலர்
உஷா பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
மதுராந்தகத்தில் 3 கட்டங்களாக 128 பேருக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது.
இதைத் தொடர்ந்து இவர்கள் வரும் நவ.5-ம் தேதி முதல் 1,361 பள்ளிகளில் ஒன்று
முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் 4,508 பேருக்கு பயிற்சி அளிப்பர்.
இதையடுத்து அந்த ஆசிரியர்கள் பொம்மலாட்டம் மூலம் நல்லொழுக்கக் கல்வியை மாணவர்களுக்குப் போதிப்பர்.இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டபோது, ‘இந்த திட்டம் தமிழகம் முழு வதும் அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட் டத்தில் வட்டார வள மைய மேற் பார்வையாளர்களுக்குப் பயிற்சி தொடங்கியுள்ளது. பொம்மாலாட் டம் மூலம் எளிதில் மாணவர்களிடம் நல்லொழுக்கப் பண்புகளை வளர்க்க முடியும்’ என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...