கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனிலோ உங்கள்
ஃபேஸ்புக் அக்கவுண்டில் சில மணி நேரம் இருந்துவிட்டு ஏதோ ஒரு ஞாபகத்தில்
லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்.
1. முதலில் ஏதாவது ஒரு கம்ப்யூட்டரில்
உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டில் லாக் இன் செய்யுங்கள். பின்னர் வலது புறம்
உள்ள செட்டிங்ஸ் என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள்.
2. செட்டிங்ஸ் க்ளிக் செய்தால் முதலில்
ஜெனரல் என்று இருக்கும். அதற்கு அடுத்தபடியாக உள்ள செக்யூரிட்டி என்ற
ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.
3. செக்யூரிட்டியை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு புதிய பாப்-அப் பக்கம் பல வித
ஆப்சன்களுடன் ஓப்பன் ஆகும். அதில் Where you’re logged in’ என்ற ஆப்சனை
தேடி கண்டுபிடியுங்கள் பின்னர் அதை க்ளிக் செய்யவும்.
4. அதில் நீங்கள் எந்தெந்த கம்ப்யூட்டரில்
எத்தனை மணிக்கு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்து பார்த்தீர்கள்
என்ற முழு விபரங்கள் இருக்கும்.
5. பின்னர் அந்த விபரங்கள் அனைத்திலும் End
Activity என்று உள்ளதை க்ளிக் செய்தால் நீங்கள் எங்கெங்கு லாக்-இன்
செய்தீர்களோ அந்த இடங்கள் அனைத்திலும் லாக்-அவுட் ஆகியிருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...