இன்ஸ்பயர் விருதுக்கான, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த
மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, அக்டோபர், 15,
16ம் தேதிகளில், திருச்செங்கோடு எலயம்பாளையத்திலுள்ள விவேகானந்தா அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அக்டோபர், 17, 19 தேதிகளில்,
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநில அளவிலான அறிவியல்
கண்காட்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...