மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங் களுக்கு மெயின் தேர்வு நடத்தி ஓராண்டுக்கு
மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படவில்லை.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில்
மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்கள் 75 சதவீதம் பதவி உயர்வு
மூலமாகவும், 25 சதவீதம் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.
நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. அந்தவகையில், டிஇஓ
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 2014 ஜூன் 8-ம் தேதி
நடத்தப்பட்டது. 11 காலியிடங்களுக்கான தேர்வை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பி.எட். பட்டதாரிகள் எழுதினர். இதில் இருந்து, அடுத்தகட்டமான மெயின்
தேர்வுக்கு சுமார்3 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு
2015ஆகஸ்ட் 6, 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஓராண்டுக்கு
மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வு
எழுதியவர்கள்கவலையில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது: டிஇஓ நியமனம் குறித்த
அறி விப்பை வெளியிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் மெயின்
தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சிவெளியிடவில்லை. மெயின் தேர்வு முடிவை வெளியிட்ட
பிறகு அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும். அப்படிப் பார்த்தால்
பணிநியமனம் முடிய 3 ஆண்டுகள் ஆகிவிடும்.
உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தும் போட்டித்தேர்வின் முடிவுகளைஆசிரியர் தேர்வு வாரியம் சில மாதங்களிலேயே வெளியிட்டுவிடுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய டிஇஓ மெயின் தேர்வு முடிவு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும்வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவை விரைவாக வெளியிட்டு, அதே வேகத்தில் நேர்முகத் தேர்வையும் முடித்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். டிஇஓ நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...