கோவையில் 40 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி
களில் படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு சாப்பிட தட்டு, டம்ளர் வழங்க,
கோவை வடக்கு அரிமா சங்கம் முன்வந்துள்ளது.
மாநகராட்சி,
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு, முட்டை, கலவை சாதத்துடன் மதிய நேரத்தில்சத்துணவு
வழங்கப்படுகிறது.
உணவு சமைக்கும் பாத்திரங்கள் புதுப்பிக்க,
ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர்
வழங்க, நிதி ஒதுக்காததால், சாப்பிடுவதற்கு, ஏழை மாணவ, மாணவியர் மிகவும்
சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்த செய்தி, நமது நாளிதழில் நேற்று
வெளியானது. இதன் எதிரொலியாக, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்
உள்ள, 40 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, ஆயிரம் தட்டு
மற்றும் டம்ளர் வழங்க கோவை வடக்கு அரிமா சங்கம் முன் வந்துள்ளது.
முதற்கட்டமாக, குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள், 70 பேருக்கு இன்று தட்டு வழங்குவதாக, அரிமா சங்க செயலாளர் ஜான்
பீட்டர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...