அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிய, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 22-ம்
தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அவர்
பாதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்தது.
ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்
நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்
இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்தார்.
ஆளுநர் வருகை காரணமாக அப்போலோ மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆளுநர் மருத்துவமனையிலிருந்து
புறப்பட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...