பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை
சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர
பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை
சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் வென்றவர்.
கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு
www.seithiula.blogspot.in போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில்
கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை
எழுந்ததால் பதக்கம் பறிக்கப்பட்டு தடகளப் போட்டிகளில் பங்கேற்க
தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில்
வேலைபார்த்த தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில்
ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளர் பணியை வழங்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...