அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,
சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள்
தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற,
மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில்,
ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர். 'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு
தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற
பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...