Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கார்களுக்கு ஏற்ற நைட்ரஜன் காற்று..!

       நகர்ப்புறங்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் எல்லாம் நைட்ரஜன் காற்று என்று தனிவகை காற்று வைத்திருப்பார்கள். 
 
             கார்களின் டயர்களில் நிரப்புவதற்காக..! இந்த காற்று சாதாரண காற்றை விட சிறந்தது என்கிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது நைட்ரஜன் காற்றில்..?

நாம் வழக்கமாக நமது கார் டயர்களில் நிரப்பும் சாதாரண காற்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறு மிகவும் சிறிய நுண்துகள்களை கொண்டது. வாகனம் வேகமாக போகும்போது டயர்கள் மிக வேகமாக வெப்பமடையும். அந்த www.seithiula.blogspot.in வெப்பம் டயரைக் கடந்து அதனுள் இருக்கும் டியூப்பை அடையும்போது அங்கிருக்கும் காற்றும் வெப்பத்தால் விரிவடையும். இப்படி விரிவடையும் காற்று ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டும்போது டயர் வெடித்து போகும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்து ஆக்சிஜன் காற்று நிரப்புவதில் இருக்கிறது. 
மேலும் ஆச்சிஜன் மிகவும் நுண்ணிய துகளாக இருப்பதால் டியூப்பில் இயல்பாக இருக்கும் நாம் அறிய முடியாத கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய துகள்கள் வழியாக மிக மிக மெதுவாக கணக்கிடமுடியாத அளவில் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனால் காற்று அழுத்தம் குறையம். குறைவான www.seithiula.blogspot.in காற்றோடு வாகனத்தை இயக்கும்போது இன்ஜினுக்கு கூடுதல் பளு ஏற்படும். எரிபொருள் செலவும் அதிகமாகும். 
நைட்ரஜன் காற்றை நிரப்பும் போது இந்த குறைகள் எல்லாம் களையப்படுகின்றன. நைட்ரஜன் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்சிஜனும், கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர், நியான் மற்றும் ஆர்கான் வாயுக்கள் எல்லாம் சேர்ந்து 1 சதவீதம் இருக்கின்றன. நைட்ரஜன் அணுத்துகள் ஆக்சிஜனைவிட பெரியது என்பதால் இந்த பல நன்மைகள் கிடைக்கின்றன.
துகள்களின் ஒப்பீடு
நைட்ரஜனின்  பெரிய துகள் டியூப்பில் இருக்கும் நுண்ணிய துளை வழியாக நுழைந்து வெளியேற முடியாது. இதனால் கார் டயர்களில் காற்று எப்போதும் இறங்காமல் இருக்கும். அப்படியே இறங்கினாலும் அது மிக மெதுவாக இருக்கும். அதனால் நைட்ரஜன் காற்று நிரப்பட்ட டயர்கள் கொண்ட வாகனங்கள் வெகுதொலைவுக்கு ஓடினாலும் சூடாவதில்லை. இதனால் டயர் வெடிக்கும் அபாயம் www.seithiula.blogspot.in மிக மிகக் குறைவு. டயர்கள் வெப்பம் அடையாமல் இருப்பதால் அதன் ஆயுள் காலமும் கூடுகிறது. 
ஆக்சிஜன் காற்றில் இருக்கும் மற்றொரு பாதகம் லேசான ஈரப்பதம். அது எப்போதும் டயரில் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஈரப்பதம் டயர்களின் ஓரத்தில் இருக்கும் இரும்புக் கம்பியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். நைட்ரஜனில் இத்தகைய ஈரப்பதம் இருப்பதில்லை. அதனால் இணைப்புக் கம்பி சேதமடையாமல் டயரின் ஆயுட்காலம் கூடுகிறது. 
நைட்ரஜன் காற்று டயரில் குறையாமல் இருப்பதால் ஓட்டுநருக்கு நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். டயர் வெடித்தாலும் கூட ஆக்சிஜன் காற்றைப்போல நைட்ரஜன் காற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் ஓட்டுநருக்கு கூடுதல் நன்மை உண்டு.  
நைட்ரஜன் நிரப்பட்ட டயர் பஞ்சர் ஆவதற்கு 50 சதவீத வாய்ப்பு குறைவு. எரிபொருளும் 5 முதல் 6 சதவீதம் மிச்சப்படுகிறது. அதனால் நைட்ரஜன் காற்று வாகனங்களுக்கு மிக மிக நல்லது. அதையே உங்கள் காருக்கு உபயோகப்படுத்துங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive