Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?

         இலவச மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 4ஜி தரவு பயன்பாடு ஆகிய பல நன்மைகளை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2016 வரையிலாக பெற உதவும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் ஒன்றை கிட்டத்தட்ட நம்மில் பலர் பெற்று விட்டனர். 

      நீங்கள் ரிலையன்ஸ் சிம் அட்டையின் வெல்கம் ஆஃபர் பயன்படுத்திக்கொள்ளும் வரை, நீங்கள் தரவு பயன்பாடு பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால், ஒரு முறை வெல்கம் ஆஃபர் முடிந்துவிட்டது என்றால் என்றால் நீங்கள் ரூ.149/-ல் இருந்து தொடங்கி ரூ.4,999/- வரையிலான எதாவது ஒரு கட்டண சேவையை பதிவு செய்ய வேண்டும்.

           ஜனவரி 1, 2017 முதல் நீங்கள் உங்களின் ஜியோ சிம் தரவு பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் அந்நேரத்தில் பயனர்கள் எந்த விதமான குழப்பத்திற்கும் ஆளாகாமல் இருக்க ரிலையன்ஸ் 4ஜி சிம் கார்டின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் யுஎஸ்எஸ்டி குறியீடுகளை இங்கே தொகுத்துள்ளோம்.

மெயின் பேலன்ஸ்

உங்கள் மெயின் பேலன்ஸை செக் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று *333# என்ற எண்ணிற்கு டயல் செய்து தெரிந்த்துக்கொள்ளலாம், மற்றொன்று 55333 என்ற இலவச எண்ணிற்கு MBAL என்று மெசேஜ் அனுப்பி தெரிந்துக்கொள்ளலாம்.

ப்ரீபெயிட் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி

நீங்கள் 199 என்ற எண்ணிற்கு BAL என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்புதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெயிட் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி ஆகிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்

பில் பணம்

உங்கள் போஸ்ட்பெயிட் பில் சார்ந்த தகவல்களை பெற 199 என்ற எண்ணிற்கு BILL என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

நீங்கள் சபஸ்க்ரைப் செய்துள்ள திட்டம்

நீங்கள் எந்த கட்டண திட்டத்தில் சேர்ந்துள்ளீர்கள் என்று தெளிவில்லாமல் இருந்தால், நீங்கள் உண்மையில் எந்த திட்டத்தில் சேர்ந்துள்ளீர்கள் Padasalai என்பதை அறிய 199 என்ற எண்ணிற்கு MY PLAN என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

உங்கள் ஜியோ நம்பர்

*1# என்ற எண்ணை டயல் செய்வதின் மூலம் நீங்கள் உங்களின் ஜியோ நம்பரை அறிந்துக்கொள்ள முடியும்.

4ஜி தரவு பயன்பாடு

டேட்டா யூசேஜ் பற்றிய தகவலை பெற ரிலையன்ஸ் ஜியோவில் பிரத்யேக வழி ஏதுமில்லை ஆக செட்டிங்ஸ் சென்று உங்கள் டேட்டா யூசேஜ்தனை பரிசோதித்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிற்கு டேட்டா லிமிட் செட் செய்து எல்லை மீறப்பட்டதும் டேட்டா டிஷ்கனெக்ட் செய்து கொள்ளவும் செய்யலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive