பணிகளை முடுக்கிவிட்ட வாரியம்:
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடி களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தற்போது, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல்
உள்ளது. இருப்பினும், மின் சாதனங்கள் பழுதால், மின்தடை ஏற்படுகிறது.
சென்னை, கோவை போன்ற, முக்கிய நகரங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், மின்தடை தொடர்கதை யாக உள்ளது.
சென்னை, கோவை போன்ற, முக்கிய நகரங்களில், இரவு, 10:00 மணிக்கு மேல், மின்தடை தொடர்கதை யாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல், இரு கட்டங்களாக
நடப்பதால், ஓட்டுச்சாவடிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை,
மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல், மழை காலத்தில் நடக்கிறது. மழை
பெய்தால்,மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு,ஓட்டுச்சாவடிகளில் மின்தடை
ஏற்படலாம். எனவே, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின் சாரம் வரும் மின்கம்பம்,
கேபிள், டிரான்ஸ்பார் மர், பில்லர் பாக்ஸ் போன்றவற்றில், பழுதான சாதனங்கள்
மாற்றப்படுகின்றன.
மாற்றப்படுகின்றன.
மழை பெய்தாலும்,ஓட்டுச்சவாடிகளில், மின் தடை ஏற்படாத வகையில்,
சிறப்புக்கவனம் செலுத்த, செயற்பொறியாளர்கள், உதவி பொறி யாளர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...