போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தன்னுடைய கல்வித் தகுதியை மூன்று விதமாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் எழுத்தாளர் அக்மர் கான் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹர்விந்தர் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த
ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், தில்லி
பல்கலைக்கழகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஸ்மிருதி
இரானிக்கு சம்மன் அனுப்ப மறுத்துவிட்டதோடு, மனுவையும் தள்ளுபடி செய்தது.
இரானி அமைச்சராக இருப்பதால் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதற்காக இந்த வழக்கு
தொடரப்பட்டுள்ளது. பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்து
விட்டன, நீதிமன்றத்திற்கு நகல் தேவையில்லை. எனவே, ஸ்மிருதி இரானிக்கு
எதிராக சம்மன் அனுப்பக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’
என நீதிபதி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...