'மாணவர் பரிமாற்ற திட்டம்' என்ற பெயரில் அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு 'வாழ்க்கை கல்வி' கற்பிக்கப்பட உள்ளது.
கிராமங்களில் உள்ள
ஒற்றுமை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள், கோயில் விழாக்கள்
உள்ளிட்ட வாழ்க்கை கல்வி குறித்து, நகர்புற மாணவர்கள் அறிவதற்காக
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதே போல், கிராமப்புற மாணவர்கள் நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.
நகரங்களை பற்றி அறியவும், பள்ளிகளில் உள்ள வசதிகள்,
கற்பிக்கும் முறை, தொழிற்கூடங்கள், நகர்புற வாழ்க்கை முறையை அறியவும்,
தாழ்வு மனப்பான்மையை போக்கவும் இத்திட்டம் உதவும்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நகர்புற பள்ளி, ஒரு கிராமப்
பள்ளி தேர்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள், இரண்டு
ஆசிரியர் வீதம் பரிமாற்றம் செய்யப்படுவர். இவர்கள் ஆறு நாட்கள் அங்கு தங்கி
இருப்பர். இத்திட்டத்திற்காக பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...