புதுடெல்லி,மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர்
மோடி தடை விதித்து உள்ளார்.
மத்திய மந்திரிசபை கூட்டங்களில் இருந்து
முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள் வெளியே
கசியாமல் இருக்கும் நடவடிக்கையாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை
விதிக்கப்பட்டு உள்ளது.சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை
எதிர்க்கொள்ள பிரதம அலுவலகம் மந்திரிசபை கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தலுக்கு தடை விதித்து உள்ளது. இந்நடவடிக்கை தொடர்பாக மத்திய செயலகம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பிரதம அலுவலகத்தின் உத்தரவின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பட்டு உள்ளது. மத்திய செயலகம் அனைத்து மந்திரிகளின் தனி செயலாளர்களுக்கு சுற்றரிக்கையை வழங்கிஉள்ளது. மந்திரி சபை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இனி ஸ்மார்ட் போன்கள்/செல்போன்கள் அனுமதிக்கப்படாது என்பதை தங்களுடைய மந்திரியிடம் எடுத்துரையுங்கள் என்று அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கிடைத்து உள்ள உளவுத்துறை தகவல்களின்படி, சீன அல்லது பாகிஸ்தான் உளவுத்துறைகளால் மின்னணு உபகரணங்கள் ’ஹேக்’ செய்யப்படலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கையுடன் உள்ளது. முக்கியமான துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுடைய செல்போன்களை அரசு கம்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களில் இணைக்க கூடாது, சார்ஜ் செய்வதற்கு கூட இணைக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.பாராளுமன்றத்தின் தெற்கு பிளாக்கில் அமைந்து உள்ள பிரதம அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகங்களில் ஸ்மார்ட் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் மந்திரிசபை கூட்டங்களின் போது செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2010-ம் வருடம் மே மாதம் பிரிட்டனில் மந்திரிசபை கூட்டத்திற்கு செல்போன்கள் எடுத்து வருவதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேம்ரூன் தடை விதித்தார். இதேபோன்று பிரான்ஸ் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மந்திரிசபை கூட்டத்தின் போது செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...