பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட
ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு
துறையில் பணியாற்றுவோர், ரயிலில், அவசர இட ஒதுக்கீட்டில் பயணம் செய்யும்
திட்டத்தை, வலுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது.
தெற்கு ரயில்வே தலைமை வர்த்த பிரிவு மேலாளர், அஜீத் சக்சேனா உட்பட, பலர்
பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், பாதுகாப்பு துறையினர், ரயிலில், அவசர இட
ஒதுக்கீட்டு வசதியை விரைவாக பெற, 'பேக்ஸ்' எண் வழியே, கோரிக்கை அனுப்பும்
சேவை துவக்க முடிவு செய்யப்பட்டது.
'பாதுகாப்பு துறையினர், 044 - 2535 3148 என்ற, 'பேக்ஸ்'
எண்ணுக்கு, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, தகவல்களை
அனுப்பலாம்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...