Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்ஃபீ அடிக்ட்டாக இருப்பது தன்னம்பிக்கைக் குறைபாட்டின் அறிகுறியாம்!

           எங்களுக்கு ஃபேஸ் புக் அக்கவுண்ட் இருக்கிறது. 
 
           அடிக்கடி செல்ஃபீ பதிவேற்றுவோம், நேரமிருக்கிறதோ, இல்லையோ சோஷியல் மீடியாவில் செலவிடுவதற்காக அங்கே, இங்கே பிய்த்துப் பிடுங்கியாவது  நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு எங்களதும், நண்பர்களதுமான செல்ஃபீ புகைப்படங்களை ஆவலாகத் தொடர்ந்து கண்காணித்து ரசித்து லைக்ஸ் போட்டு கொண்டாடுவோம் என்கிறீர்களா?  ஆமாமெனில்நீங்கள் அறிந்து கொள்ளத் தான் இந்தச் செய்தி. நீங்கள் தீவிர செல்ஃபீ பிரியர்களாக இருப்பது உங்களது சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை குறைபாட்டின் அறிகுறியாம். இது அடிக்கடி ஃபேஸ்புக்கில் மூழ்கும் போது பார்த்துக் காண்டாகி சபிக்கும் அப்பாக்களின் கருத்து எனில் ’அட... இந்தக் கருத்து கந்தசாமி, குப்புசாமி, கோபால்சாமிகளுக்கு வேறு வேலை இல்லை’ என்று கடந்து போய் விடலாம். ஆனால் இது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப் பட்ட செய்தி என்பதால் சற்றுக் கவனித்து செல்ஃபீ விசயத்தில் நிதானிப்பது நல்லது.
சோஷியல் மீடியாக்களில் புகைப்படங்களையும், செய்திகளையும் பதிவேற்றுவது பிறருக்கு நல்ல விசயங்களைக் கடத்தும் முயற்சியாக இருக்க வேண்டும். அதை விடுத்து நமக்கு நாமே திட்டம் போல நமது செல்ஃபீக்கள் மற்றும் நண்பர்களது செல்ஃபீக்களை விருப்பக்குறியிடவும், பகிரவும் மட்டும் பயன்படுத்தும் போது அது நிச்சயம் மேற்சொன்ன விளைவைத் தான் ஏற்படுத்தக் கூடும். சோஷியல் மீடியா
பயன்பாட்டாளர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் சோசியல் மீடியாக்கள் எல்லாவற்றிலும் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருப்பார்கள், பதிவேற்றுதல், பகிருதல், விருப்பக் குறியிடுதல் என எதுவும் செய்யாமல் வெறுமே அடுத்தவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். இதற்குப் பெயர் ’பதுங்கும்’ குணாதிசயமாம். இப்படி இருப்பது உளவியல் ரீதியாக அவர்களது குணநலன்களைப் பற்றிப் பிறர் தெரிந்து கொள்ள உதவுவதாக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் ஆய்வு முனைவர் பட்டமேற்படிப்பு உளவியல் மாணவர் ரோக்ஸ்வாங் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive