உள்ளாட்சி அமைப்புகளில், 24ம் தேதிக்கு பிறகு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட
வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து,
தனி அலுவலர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்பின்
ஒட்டுமொத்த கண்காணிப்பும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது.
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம், இன்னும் சில நாட்கள்
மட்டுமே, உள்ள நிலையில், அவர்கள் விரக்தியில் உள்ளனர்.கடந்த, 1996ம்
ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள்
நியமிக்கப்பட்டது போல், இந்த ஆண்டிலும் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம்
மாவட்டத்தை பொறுத்தவரையில், 13 ஒன்றியங்களும், 17 பேரூராட்சிகளும், ஒன்பது
நகராட்சிகளும், ஒரு மாவட்ட ஊராட்சியும் செயல்பட்டு
வருகிறது.
ஒன்றியங்களுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரியும், நகராட்சிகளுக்கு அந்தந்த
கமிஷனர்களும், பேரூராட்சிகளுக்கு செயல்அலுவலர்களும், மாவட்ட ஊராட்சி
நிர்வாகத்திற்கு மாவட்ட ஊராட்சி
செயலரும் நியமிக்கப்படுவர். ஆனால், அனைத்து தனி அதிகாரிகளின் செயல்பாடுகள்
அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கீழ் கொண்டு வரப்படும். இதனால், மாவட்ட
ஆட்சியரின் கட்டுப்பாட்டில், மொத்த திட்டங்களும், உள்ளாட்சியின் பணிகள் இயங்கும்.
தனி அதிகாரிகளின் பணி
ஊராட்சி தலைவரிடம் உள்ள, காசோலை எழுதும் அதிகாரம், தனி அதிகாரியிடம் வழங்கப்படும்
பேரூராட்சி மற்றும் நகராட்சி போன்ற அமைப்புகளில், அடிப்படை பணிகளை தனி அதிகாரிகளே மேற்கொள்வர்
நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானங்களின்றி, அடிப்படை திட்டங்கள் மேற்கொள்ளப்படும்
வெள்ளத்தடுப்பு, பாதாள சாக்கடை, மின் விளக்கு, குடிநீர் ஆகிய பிரச்னைகளை, தனி அதிகாரிகளே கவனிப்பர்
மக்கள் பிரதிநிதிகளின் கையொப்பம் இன்றி, இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு
திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டம், ஆகியவை தனி அலுவலர்களே, பயனாளிகளிடம்
வழங்குவர்
மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு மட்டுமே, வளர்ச்சி பணிகளை தனி அலுவலர்கள் மேற்கொள்வர்
உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லாததால், தீர்மானங்கள் இன்றி, அனைத்து பணிகளையும், தனி அலுவலர்கள் செய்வர்
மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி பணிகளை, மக்கள் பிரதிநிதிகளின், 'கமிஷன்' பிரச்னையின்றி, நடத்தப்பட வாய்ப்பு உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...