சேலம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர்
பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு, அக்., 22ம் தேதி, தமிழகம் முழுவதும்
நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில், இத்தேர்வு எழுத, 4,700பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக,சேலத்தில், 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், நேற்று, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில், இணை இயக்குனர்கள் சேதுராமவர்மா, செல்வகுமார், சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர், தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து,விளக்கம் அளித்தனர். மேலும், தேர்வர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள்,அலைபேசி பயன்படுத்துவதை தடுக்கவும்,கண்காணிக்கவும் அறிவுறுத்தினர்.
இதில், 12 மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கண்காணிப்பாளர்கள் என, 35க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம், அக்., 17ம் தேதி நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...