இருப்பிட முகவரி இல்லாதவர்களும், பரிந்துரை
அடிப்படையில், 'ஆதார்' பெறலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின்
அனைத்து குடிமக்களுக்கும், ஆதார் எண் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு
தீவிரமாக செயல்படுத்துகிறது.
தேசிய மக்கள்தொகை பதிவு அடிப்படையில், ஆதார்
எண்கள் உருவாக்கப்பட்டன. தற்போது, மக்கள் தொகை பதிவேட்டில் இடம்
பெறாதோருக்கும் ஆதார் எண் பதியப்படுகிறது.
முதலில், 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு
மட்டும் ஆதார் எண் பதியப்படும் என, அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு,
செப்., 14ல், நடத்திய ஆதார் கமிட்டி கூட்டத்தில், புதிய திருத்தங்கள்
செய்யப்பட்டன. அதன்படி, பிறந்த குழந்தைக்கும், ஆதார் எண் பெறலாம். இருப்பிட
முகவரி இல்லாதோரும், கண்டிப்பாக ஆதார் எண் பெற வேண்டும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போர்,
நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிக்காமல், பல இடங்களுக்கும் சென்று தொழில்
செய்வோரின் குடும்பத்தினர் உட்பட, அனைவரும் ஆதார் எண் பெறலாம். இருப்பிட
முகவரி இல்லாதோர், ஏதேனும் ஆவணங்கள் அடிப்படையில் ஆதார் எண் பெறலாம்.
இல்லையெனில், உள்ளாட்சி பிரதிநிதி, கிராம நிர்வாக அலுவலர், கெசட்டட்
அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்ளிட்ட, யாராவது ஒருவரிடம் சான்றிதழ் பெற்று வர
வேண்டும் அல்லது தெரிந்த ஒருவர், அவரது ஆதார் எண்ணை சேர்த்து, பரிந்துரை
கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
Good move
ReplyDelete