'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை
பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்
அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு
முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை
அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.
இந்நிலையில், தமிழக கவர்னரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று
வெளியிட்ட அறிவிப்பு:அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், தமிழக கவர்னரை
இதுவரை, 'மேதகு ஆளுனர்' என, குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இனி,
'மாண்புமிகு ஆளுனர்' என அழைத்தால் போதும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவ்
தெரிவித்துள்ளார். அதே நேரம், கவர்னரை, வெளிநாட்டு பிரதிநிதிகள்
சந்திக்கும் போது, மேதகு ஆளுனர் என்றழைப்பது கடைபிடிக்கப்படும்.இவ்வாறு
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...