அனைவருக்கும்
கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால்,
ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள்
பாதிக்கப்பட்டு உள்ளன.
இலவச கல்வி உரிமை சட்டத்தை, முழுமையாக அமல்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது. மாநில அளவில், திட்ட ஒருங்கிணைப்பாளராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளார். திட்டத்திற்கு, மத்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி கிடைக்கிறது.
இந்நிதியை
செலவு செய்ய, பல திட்டங்களை அதிகாரிகள், பெயரளவில் செயல்படுத்துவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'மாணவர்களை படிக்க வைக்க துவங்கிய திட்டம்,
தற்போது, மாணவர் நலனை புறக்கணிப்பதாக, மாறி விட்டது' என, ஆசிரியர்கள்
புகார் தெரிவிக்கின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு, தொடர் மதிப்பீட்டு முறையான, சி.சி.இ., அமலில் உள்ளது.
இதற்கு, ஆண்டின் துவக்கத்தில், மாணவர்களின் விபரங்களுடன் பதிவேடு துவக்க
வேண்டும். பருவத்தேர்வுகள் முடிந்ததும், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை,
அதில் பதிய வேண்டும்.பள்ளிகள் இந்த பதிவேட்டை தாமாகவே தயாரித்து,
மாணவர்களின் விபரங்களை எழுதி வைத்துள்ளன. கல்வி ஆண்டு துவங்கி, ஐந்து
மாதங்களுக்கு பின், புதிதாக தகவல் பதிவேடு புத்தகத்தை கொடுத்து, அதில்,
மாணவர் விபரங்களை பதிவு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
'மறுபடியும் முதலில் இருந்தா...' என, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து
உள்ளனர்.தொடக்கப் பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர் மட்டும்
இருக்கும் நிலையில், அவர்கள் பாடம் நடத்துவதை விட்டு, தினமும் பதிவேடு
எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதால், வகுப்புகளில் பாடம் நடத்தும் நேரம்
குறைந்துள்ளது.
Yes
ReplyDelete