உயர் கல்வி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, உயர் கல்வி மன்ற
கவுன்சில் கூடி ஆலோசித்து, முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கம்.
2015 அக்.,
14ல் கூட்டம் நடந்தது; நாளையுடன் ஓராண்டு முடிகிறது. உயர் கல்வி மன்ற
விதிகளின் படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கவுன்சில் கூடி ஆலோசனை நடத்த
வேண்டும்.
ஆனால், ஒரு ஆண்டாக, கவுன்சில் கூட்டம் நடத்தப்
படவில்லை. உயர் கல்வி அமைச்சரை தலைவராக கொண்ட கவுன்சிலுக்கு, துணை தலைவராக,
உயர் கல்வி செயலர் உள்ளார். உறுப்பினர் செயலராக, கல்லுாரி கல்வி இயக்குனர்
பொறுப்பு வகிப்பார். இவர்களுக்கு கீழ் மற்ற அதிகாரிகள் இடம்பெறுவர்.
ஆனால், இப்போது கல்லுாரி கல்வி இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ராஜேந்திர
ரத்னு கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்; அவருக்கு கீழ் பணிபுரியும், கல்லுாரி
கல்வி இணை இயக்குனர் சேகர், உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலராக
இருக்கிறார். அதனால், கீழ் நிலை அதிகாரி நடத்தும் கூட்டத்தில், அவரது உயர்
அதிகாரி, சாதாரண உறுப்பினராக பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. இதை எப்படி
மாற்றுவது என்பதில், உயர் கல்வி மன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது;
அதனால், கூட்டம் நடத்துவது தள்ளி போடப்பட்டுள்ளது. ஆனால், கவுன்சில் கூடி
முடிவெடுத்தால் மட்டுமே, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற முடியும். எனவே,
கவுன்சில் கூட்டம் எப்போது நடக்கும் என, கல்லுாரி பேராசிரியர்கள்
எதிர்பார்த்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...