மூளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைக்கான அவசர தொலைபேசி அழைப்பு எண்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல்துறை உதவி ஆணையர் அண்ணாதுரை, சிம்ஸ் துணைத் தலைவர் ராஜூ சிவசாமி ஆகியோர் முன்னிலையில் 24 மணி நேரமும் இயங்கும் 044-20002020, 9677715490 ஆகிய எண்களை சிம்ஸ் மருத்துவமனை உதவி தலைவர் ராஜூ சிவசாமி அறிவித்தார்.
இதுகுறித்து ராஜூ சிவசாமி கூறியதாவது:
மாரடைப்பு போன்று மூளைவாத நோய்க்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிக முக்கியம். சிம்ஸ் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சேவையுடன் மேற்கண்ட மூளைவாத அவசர உதவி எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உரிய சிகிச்சை பெற முடியும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...