குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு
மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, விடைத்தாள் நகல்களை
சம்பந்தப்பட்டமாணவர்களுக்கு வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்
பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி,
மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் எழுத்துத்
தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும், மொத்தமாக 4
பாடங்களுக்கும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண்ணுக்கு குறையாமலும்
பெற்றிருந்தால் மட்டுமே அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்
கப்படுவர்.ஆனால் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீதத்துக்கும் குறைவான
மதிப்பெண் பெற்றிருந் தால் மட்டுமே மறுமதிப்பீடு செய்யப் படும் எனவும், 4
பாடங்களுக்கும் சேர்த்து 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண்
பெற்றிருந்தால் மறுமதிப்பீடு கிடையாது எனவும் முரண்பாடான நடைமுறையை
பல்கலைக்கழகம் பின்பற்றி வருகிறது.
இந்த நடைமுறையை எதிர்த்து மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவ ரான டாக்டர் இவான் ஏ.ஜோன்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம், “ஒரு பாடத்தில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறாதபோது அந்த மாணவரின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யும் மருத்துவ பல்கலைக்கழகம் அதுவே மொத்தமாக 4 பாடங்களுக்கும் சராசரி குறைந்தால் மறுமதிப்பீடு செய்ய முடியாது எனக் கூறுவது சரியில்லை. மேலும் சில மாணவர்களின் முதல் மதிப்பீட்டை விட இரண்டாவது மதிப்பீட்டில் 30 சதவீதம் வரை மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன.
முதல் மதிப்பீடு சரியாக நடைபெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே எந்தெந்த மாணவர்கள் இரண்டாவது அல்லதுமூன்றாவது மறுமதிப்பீடு கோரியுள்ளார்களோ அவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அதுபோல அந்த விடைத்தாள் களின் நகல்களை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடராத பிற மாணவர்களுக்கும் பொருந்தும்” என உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...