ஒரு மனிதன் வாழும் போது பொருளையும், மறைந்த பின் உடல் உறு ப்புகளையும் தானம் செய்த
வண்ணம் உள்ளனர். ஆனால் தானம் செய்பவர்களுக்கு பின்னால் யாரோ ஒருவர் துாண்டுதலாக இருக்கிறார் என்பது தான் முக்கியம்.
வண்ணம் உள்ளனர். ஆனால் தானம் செய்பவர்களுக்கு பின்னால் யாரோ ஒருவர் துாண்டுதலாக இருக்கிறார் என்பது தான் முக்கியம்.
அந்த வகையில் பரமக்குடி கருப்பணசாமி கோயில் தெருவில் வசிக்கும் சவுராஷ்ட்ர
மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ், 46 என்பவரை குறிப்பிடலாம். கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறார். 1998ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பின் இதுவரை 30 முறை இரத்ததானம் செய்துள்ளார். அவசரத்தேவைகளுக்கு மற்றவர்களை ரத்ததானம் செய்ய ஊக்குவித்து வருகிறார்.

இவைதவிர கோயில்களில் நேர்முகவர்ணனை, அரசு சார்பில் நடக்கும்
குடியரசு, சுதந்திர தின நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி
வருகிறார். மார்கழியில் கோயில்களுக்கு சென்று திருப்பாவை தொடர் சொற்பொழிவு
நடத்திவருகிறார். இவ்வாறு பன்முக திறனுடன் இடைவிடாத கல்வி, ஆன்மீகம், சேவை
என, ஆசிரியரின் பட்டியல் நீள்கிறது.
சேவை பணிகள் குறித்து ஆசிரியர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
கல்லுாரியில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., மூலம் சேவை
செய்யும் எண்ணம் வந்தது. 10 வருடங்களாக கண் தானத்தின் முக்கியத்துவத்தை
உணர்ந்து 80 பேரிடம் கண்களை தானமாக பெற்று மற்றவர்களுக்கு உதவியுள்ளேன்.
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலராக ராதாகிருஷ்ணன் இருந்த
போது, அறிவியல் பயிற்சி கட்டகம் தாயாரித்து கொடுத்துள்ளேன். 2011ல்
சமச்சீர் கல்வி ஆரம்பித்த நாளில் 10 ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து
சக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். இத்துடன் முதலமைச்சரின்
நிகழ்ச்சி தொகுப்பாளராக செல்ல, தமிழக வளர்ச்சித்துறையால் நடத்தப்பட்ட
நேர்முக தேர்வில் பங்கேற்றுள்ளேன், என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...