ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் தேசிய இலச்சினை இனிமேல் இடம்பெறுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுப் பணியாற்றி முடித்த பின் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவை மத்திய பணியாளர் பயிற்சித் துறை பரிசீலித்து வருகிறது. முன்னதாக, அவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தேசிய இலச் சினை இடம்பெறத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் அண்மையில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவோருக்கும் தேசிய இலச்சினையுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கும்போது தேசிய இலச்சினையை இடம்பெறச் செய்வதை அனைத்து மத்திய அமைச்சகங்களும் பின்பற்றலாம்.
எனினும், தன்னாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

அத்தகைய தன்னாட்சி அமைப்புகள் தங்களின் இலச்சினையை சம்பந்தப்பட்ட அடையாள அட்டைகளில் விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 58 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது 58 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...