வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும்
கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை
ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், 87 அரசு கல்லுாரிகள்,
162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும், 1,178 சுயநிதி கல்லுாரிகள் என,
மொத்தம், 1,464 கலை, அறிவியல்மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்
உள்ளன. மேலும், 600க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்கிடெக்ட்
கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
இவற்றில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல்
கல்லுாரிகளுக்கும், அரசு அமைத்த நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி, கல்வி
கட்டணத்தை நிர்ணயித்துஉள்ளது. ஆனால், 500க்கும் மேற்பட்ட கலை, அறிவியல்
கல்லுாரிகளுக்கு, இதுவரைகட்டணம் நிர்ணயிக்கவில்லை. இதனால், கல்லுாரிகள்,
தங்கள் விருப்பம் போல,பல லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிப்பதாக, புகார்
எழுந்துள்ளது.
இது குறித்து, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர்
என்.பசுபதி கூறியதாவது:'கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், கல்வி கட்டணம்
நிர்ணயிக்க வேண்டும்' என, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த
உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அடுத்த கல்வி ஆண்டிலாவது,
கல்வி கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டிக்கு, உயர்
கல்வித்துறை பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...