சமச்சீர்
கல்விக்கான, இரண்டாம் பருவ புத்தகத்திற்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,
தனியார் பள்ளி மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
சமச்சீர் கல்வி
பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, தமிழக அரசின் பாடநுால்
மற்றும் சேவை பணிகள் கழகம், மூன்று பருவங்களாக புத்தகங்களை வழங்குகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாகவும், தனியார்
மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளிடம் இருந்து கட்டணம் பெற்றும்,
புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
முதல்
பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல், பள்ளிகள்
திறக்கப்பட்டன; தற்போது, இரண்டாம் பருவ பாடங்கள் நடத்த வேண்டும்.
புத்தகங்கள் கேட்டு, பல பள்ளிகள், ஆன்லைனில், விண்ணப்பித்துள்ளன. இதில், பல
பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள்
தவிப்பில் உள்ளனர். அச்சகங்களில் இருந்து புத்தகங்கள் தாமதமாக வருவதால்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, பள்ளிகளிடம், பாடநுால் கழக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...