சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்.,
கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ்
வங்கி மவுனம் காப்பது, வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில்
இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார்
தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப்
பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது.
அதில், யெஸ் பேங்கிற்கு, பணப் பட்டுவாடா சேவைகளை மேற்கொண்டு வரும், ஹிட்டாச்சி
பேமன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், 'சர்வர்' மூலம், வங்கி
வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., கார்டு, ரகசிய, 'பின்' எண் உள்ளிட்ட
தகவல்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.
யெஸ் பேங்கின், ஏ.டி.எம்.,மை பயன்படுத்திய, பிற வங்கி வாடிக்கையாளர்களின்
தகவல்களும் திருடப்பட்டு உள்ளன. இந்த வகையில், 19 வங்கிகளைச் சேர்ந்த, 32
லட்சம், ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
அவற்றில், 26 லட்சம், 'மாஸ்டர், விசா' கார்டுகள்; ஆறு லட்சம், 'ரூபே'
கார்டுகள். திருடப் பட்ட, ஏ.டி.எம்., கார்டு விபரங்கள் மூலம், 641
வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு
உள்ளது.
இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆறு லட்சம், 'டெபிட்' கார்டுகளின்
தகவல்கள் திருடப் பட்டதாக கூறியுள்ளது. அந்த கணக்கு களை உடனடியாக முடக்கி,
வாடிக்கையாளர் களுக்கு புதிய கார்டுகள் வழங்குவதாக தெரிவித்து உள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், சில லட்சம் வாடிக்கையாளர்களின்
டெபிட் கார்டு, 'பின்' எண்களை மாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதே போல, பல
வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளன.
இந்நிலையில், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டை தடுப்பதற்கான
நடவடிக்கைகளை,மாஸ்டர், விசா, ரூபே கார்டு நிறுவனங்கள் இணைந்து மேற் கொண்டு
வருவதாக, என்.பி.சி.ஐ., தெரிவித்து உள்ளது.
ஆனால், இந்திய வங்கி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் நடைபெற்றுள்ள தகவல்
திருட்டு குறித்து, அனைத்து வங்கிகளை யும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள
ரிசர்வ் வங்கி, எதுவும் கூறாமல் மவுனம் காப்பது,வங்கி வாடிக்கையாளர்களிடையே
கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
'பலவங்கிகள், ஏ.டி.எம்., கார்டு தகவல் திருட்டு குறித்து, அதிகாரபூர்வமான
எண்ணிக்கையை வெளியிடவில்லை. அவை வெளியானால், தகவல்கள் திருடப்பட்ட,
ஏ.டி.எம்., கார்டுகளின் எண்ணிக்கை, மேலும் அதிகமாக இருக்கும்' என, வங்கி
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்காணிக்க வேண்டும்
ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போகும் சம்பவங் கள், வளர்ந்த நாடுகளிலும்
நடக்கின்றன. இது, ஒரு குற்ற செயல்.வங்கிகளை நம்பி தான், வாடிக்கையாளர்கள்
பணம், டெபாசிட் செய் கின்றனர். ஏ.டி.எம்., கார்டு விபரம் திருடு போவதால்,
வாடிக்கையாளர்கள், வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கையை இழப்பர். வங்கி களில்,
பணத்தை தொடர்ந்து டெபாசிட் செய்ய மாட்டர் என்பதால், அவற்றின் லாபமும்
குறையும்.
எனவே, வாடிக்கையாளரின் விபரங்களை பாதுகாப்பதில், வங்கிகள் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும். அவற்றை, வங்கிகள் முறையாக செய்கின்றனவா என்பதை, ரிசர்வ்
வங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள்
இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.
ஷியாம் சேகர் பொருளாதார நிபுணர்
விபரம் கேட்பு
ஏ.டி.எம்., கார்டு தகவல் திருடு குறித்த அனைத்து விபரங்களையும் வழங்குமாறு,
மத்திய நிதி அமைச்சகம், அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்து
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...