ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு
வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும்
நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு
இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘tnpds.com’ என்ற இணைய
தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக்
செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து,குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்தஎண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.

Pl simplify the procedures like Aadharcard for adding and deleteing names
ReplyDelete