மருத்துவ படிப்புக்கான நீட்
தேர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் மாணவர்களுக்காக பயிற்சி மையங்கள்
தொடங்கப்படும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ
படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நீட் எனப்படும் நாடு தழுவிய தகுதிக்கான
நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்தில் அதற்கு
கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக்
கட்சிகளும் ஒருமித்த குரலில் நீட் தேர்வு கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற புதிய
கல்வி குழுவின் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்
செய்தியாளர்களிடம் பேசிய www.seithiula.blogspot.in தமிழக பள்ளி
கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், நீட் தேர்வை எதிர்கொள்ளும்
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சட்டப்படி நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள்
தொடரும் என அமைச்சர் கூறினாலும், பள்ளி கல்வித் துறை மூலமே பயிற்சி
மையங்கள் தொடங்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு
மருத்துவ கல்லூரிகளில் சேர ஒரு போதும் நீட் தேர்வு இல்லை என்பதை தமிழக அரசு
உறுதி செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவ சங்கத் தலைவர்
ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர நடப்பு ஆண்டு முதலே
பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், மத்திய
அரசு கொண்டு வந்த அசவர சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவ
கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு www.seithiula.blogspto.in விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும்
பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு
முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக
அரசின் நிலைப்பாடு திடீரென மாறி இருப்பது அரசியல் வட்டாரத்திலும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...