உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தில்லி சுகாதாரத்
துறை அமைச்சருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தில்லியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பாதித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் நோயை கட்டுப்படுத்த தில்லி அரசும், சுகாதாரத் துறையும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தில்லி அரசு தவறிவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத சுகாதாரத் துறைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 24 மணி நேரம் அவகாசம் கேட்டார் தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சத்யேந்திர ஜெயின்.
மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது, மாநில அரசுக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்க முடியாது என்று காட்டமாகக் கூறியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...