நடப்பு ஆண்டுக்கான, ரயில்வே புதிய கால அட்டவணையை, தெற்கு ரயில்வே வெளியிட்டது; அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சேவை மாறும் ரயில்கள்
கோவை மும்பை (குர்லா எக்ஸ்பிரஸ்), கோவை மேட்டுப்பாளையம்
பாசஞ்சர் (56150, 56151), கோவை சென்னை (சதாப்தி), கோவை மன்னார்குடி
(செம்மொழி), பாலக்காடு டவுன் கோவை (66606); பாலக்காடு ஈரோடு (66608);
விருதாச்சலம் சேலம் (76849); கண்ணூர் கோவை (56650); ஜோலார்பேட்டை ஈரோடு
(56839); நாகர்கோவில் கோவை (56319) ஆகிய ரயில்கள், ஐந்து நிமிடங்கள் முதல்,
அரைமணி நேரம் வரை, நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிறுத்தங்கள்
சென்னை நாகர்கோவில் ரயில் இரண்டு மார்க்கத்திலும்,
திருப்பத்தூரில் நின்று செல்லும். சென்னை மங்களூரு ரயில், சங்ககிரியிலும்;
கொச்சுவேலி ஹைதாராபாத் எக்ஸ்பிரஸ், மொரப்பூரிலும்; ஆலப்புழா தன்பாத் ரயில்,
பொம்மிடியிலும்; டாடா நகர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சாமல்பட்டியிலும்; குர்லா
எக்ஸ்பிரஸ் ஓமலூரிலும்; ஜஷ்வந்பூர் கண்ணூர் மற்றும் கொச்சுவேலி பெங்களூரு
ரயில்கள் திருப்பூரிலும் நின்று செல்லும். இவை உட்பட, 53 ரயில்கள்,
வெவ்வேறு ஸ்டேஷன்களில் நின்று செல்லும் வகையில் கால
அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...