சிகிச்சை அளிப்பதற்கு கடினமாக கருதப்படும் தலை மற்றும் கழுத்து
புற்றுநோய்க்கான எதிர்ப்பு மருந்து ஒன்று நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை
கொடுத்துள்ளது
சோதனை முயற்சி ஒன்றில், கீமோதெரபி கொடுக்கப்பட்ட 17
சதவிகிதப் பேரைக் காட்டிலும், நிவோலூமப் என்னும் அம்மருந்து கொடுக்கப்பட்ட
36 சதவிகித பேர் ஒரு வருடத்துக்குப் பிறகும் உயிர் வாழ்ந்தனர். அந்த
மருந்து ‘சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று’ என விஞ்ஞானிகள்
தெரிவித்திருக்கின்றனர். அந்த நோய் தடுப்பு மருந்துகள், உடலில் மறைந்துள்ள
புற்றுநோய் செல்களை வெளிவரச்செய்து அதற்கு எதிராக செயல்படும் வகையில் நோய்
எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. 15 வாரத்தில் இதன் பலன் தெரிகிறது. சுமார்
350 நோயாளிகளுக்கும் மேலானவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ள
இந்த கண்டுபிடிப்பு, மருத்துவத்துக்கான நியூ இங்கிலாந்து பத்திரிகையில்
வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...