ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை
முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்
கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு,
'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின்,
ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
மொத்தம் உள்ள, 2.04 கோடி ரேஷன் கார்டுகளில், 7.76 கோடி
பயனாளி கள் உள்ளனர். நேற்று வரை, 4.76 கோடி மட்டுமே, ஆதார் விபரங்களை
பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த விபரத்தை தராததால், ஸ்மார்ட்
கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் சிரமப்படுவர்
என்பதால், ஆதார் விபரம் தர காலக்கெடு நிர்ணயிக்காமல் இருந்தோம். ஆனால்,
ஆதார் கார்டு வைத்துள்ள பலரும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் அலட்சியமாக
உள்ளனர். இதனால், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே,
ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர, நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு
நிர்ணயிக்க உள்ளோம். இதற்கு, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது.
அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும்.அதன்பின், ஆதார் விபரம் தருவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும். தற்போது, ஆதார் மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால், இதுவரை
ஆதார் கார்டு பெறாதோர், விண்ணப்பித்து, ரேஷனில், விரைவாக பதிய
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
NO LIMIT
ReplyDelete