ஆசிரியர்
பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம்
செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மாற்றம் கொண்டு வர, கல்வி கவுன்சில்
முடிவு செய்துள்ளது.கடந்த கல்வி ஆண்டு வரை, பி.எட்., படிப்பு, ஓராண்டாக
இருந்தது. 2014ல் அமலான புதிய விதிமுறைகள்படி, இரு ஆண்டாக மாற்றப்பட்டது.
அதன்படி, தமிழகத்திலுள்ள, 690 கல்லுாரிகளும், பி.எட்., படிப்பை
நடத்துகின்றன.
இந்த
கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின்
அங்கீகாரத்தை பெற வேண்டும்; பின், தமிழகத்தில் உள்ள, ஆசிரியர் கல்வியியல்
பல்கலையில், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். இந்த நடைமுறையிலும்,
பாடத்திட்டம் வரையறை செய்வதிலும் பிரச்னைகள் உள்ளதாக, மத்திய அரசுக்கு,
கல்வியாளர்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதை தொடர்ந்து, பி.எட்.,
விதிகளில், மீண்டும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது
தொடர்பாக, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தங்கள்
கருத்துக்களை, அக்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, டில்லி ஆசிரியர் கல்வி
கவுன்சில் தெரிவித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...