மத்திய அரசு துறைகளில், 440 காலியிடங்களை
நிரப்புவதற்கான, இன்ஜி., சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை, மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே,
இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே
ஆப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு
நடத்தப்படுகிறது.
ஜன., 8ல் நடக்க உள்ள, இந்த தேர்வுக்கு, https://upsconline.nic.inஎன்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலைதேர்வுக்கு பின், பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும்.
பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்ற, 30 வயதுக்கு குறைவானோர் பங்கேற்கலாம்; மேலும்,விபரங்களை, http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...