முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய
அளவில் நடத்தப்படும் "கேட் (பட்டதாரி நுண்ணறி தேர்வு) 2017' நுழைவுத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
திங்கள்கிழமை காலை 11 மணியோடு இந்த கால அவகாசம் முடிந்துவிடும்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்கள், பொறியியல் - தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக். மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை "கேட்' நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை "கேட்', "டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த அகில இந்திய அளவிலான "கேட்' தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஐஐடி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது.
தேர்வு எப்போது? இந்தத் தேர்வானது கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும். 2017 பிப்ரவரி 4, 5, 11, 12 ஆகிய நான்கு தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
வெளிநாட்டினருக்கு அனுமதி: "கேட்' தேர்வெழுத முதன் முறையாக வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் தகுதி பெறும் இந்த 6 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்திய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
விவரங்களுக்கு www.gate.iitr. ernet.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...