தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என வோடபோன் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ்
நிறுவனத்தின் ஜியோ சூறாவளியை சமாளிக்க நாள்தோறும் புதிய அறிவிப்புகளை
ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.
வோடபோன்
நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தீப் கட்டாரியா கூறுகையில்
"தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வோடபோன்
நிறுவனத்தில் வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த
பகுதிக்கு சென்றாலும் அழைப்பு நின்றுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை"
என்றார்.
ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த ஜூன் 15-ம் தேதி ரோமிங்கில் இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...