ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்'
இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் என, தெரிகிறது.
தமிழகத்தில், கடந்த ஐந்து
ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாய் செலவில், 38 லட்சம் லேப் -- டாப்கள்,
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு துவங்கிய, இந்த
முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன.
மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும்,
'மாணவர்களுக்கான இலவச லேப் - டாப் திட்டம் தொடரும்' என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், இதுவரை அவை வழங்கப்படவில்லை.
எனினும், 'இந்த ஆண்டு, 5.36 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்படும்' என,
சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான, 'டெண்டர்' இன்னும்
கோரப்படவில்லை.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'டெண்டர்
பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன; விரைவில், டெண்டர் கோரப்படும்'
என்றனர். டெண்டர் அறிவிப்பு நவம்பரில் வெளியானாலும், அதற்காக, தனியார்
நிறுவனங்களுக்கு, ஒரு மாதமாவது அவகாசம் தர வேண்டியிருக்கும். அவர்கள்,
டெண்டர் புள்ளிகளை சமர்ப்பித்த பின், அதை இறுதி செய்து, லேப் - டாப்களை
கொள்முதல் செய்வதற்கு, சில மாதங்கள் பிடிக்கும். பள்ளிகளில்
வினியோகிப்பதற்குள், இறுதி தேர்வுக்கு முந்தைய விடுமுறை துவங்கி விடும்.
அதனால், அடுத்த கல்வியாண்டு வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
எனவே, டெண்டர் பணிகளை, மின்னணு நிறுவனமான, 'எல்காட்' விரைவாக முடிக்க
வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...