அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும்
மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை
மறுத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 14 வகை இலவச
நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆனாலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தொடர்ந்து இலவச
உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 'உரிய கட்டணம் செலுத்தினால்
மட்டுமே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்' என, வேலுார், கோவை, திருப்பூர்
உள்ளிட்ட மாவட்டங்களில், பிரச்னை எழுந்துள்ளது.அரசு நிதி உதவி இல்லாத
வகுப்பு மாணவர்களிடம், புத்தகத்திற்கு கட்டணத்தை வசூலித்து தரும்படி,
பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். அதனால், இந்த
பிரிவு மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...