இன்ஜி.,
கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை,
இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும்
தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை. இந்த மாநில மாணவர்கள், மற்ற மாநில
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்கின் றனர்.
சில நேரங்களில், படிப்பில் சேர வரும் மாணவர்களை, கட்டணம் தொடர்பான, அடிப்படையில்லாத காரணங்களை கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உத்தரவு படி, அனைத்து கல்லுாரிகளும், முக்கிய பாடவாரியாக, மாணவர்களின் கட்டண பட்டியலை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதே போல், சுயநிதி பல்கலைகளுக்கும், மத்திய அரசின் சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...