மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ)
மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்
பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
தமிழகம் போன்ற மாநிலங்களில் பல்கலையின் படிப்புகள் ஆங்கிலம்
மற்றும் இந்தியில் இருந்தால் மட்டும் போதாது. எனவே, அடுத்த ஆறு மாதத்தில்
முக்கிய படிப்புகள், தமிழ் மொழியில் துவங்கப்படும். தமிழ்மொழியில்
தேர்வுகள் நடத்தப்படும் போது, வினாத்தாள் திருத்தும் பணியை, மேற்கொள்ள
ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வரும் ஜன., 2017 முதல் இணையதளம் மூலம் கற்பிக்கும் திட்டமான
'மூக்' செயல்பாட்டுக்கு வரும். அதன் மூலம், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் பயன்பெறுவர்.இணையதள கல்வியை எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள்
பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ் பெற உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்த சில மாதங்களில், கலாசார மேம்பாடு, ஆசிரியர் கல்வி
போன்றவற்றுக்காக நான்கு தொலைக்காட்சி சேனல்கள் துவங்கப்பட உள்ளன. அவற்றில்
'இக்னோ' பல்கலை பெரும்பங்கு வகிக்கும். பல்கலை சார்பில் கிராமங்களை
தத்தெடுக்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது.புதிய கல்வி கொள்கை,
பல்கலையின் பாடத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாகவே உள்ளது. எஸ்.சி.,
எஸ்.டி., பிரிவினர்களுக்கு கட்டணமின்றி கல்வி அளிக்கப்படுகிறது. அவற்றை
அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
பல்கலையின் மண்டல சேவை பிரிவு இயக்குனர் வேணுகோபால் ரெட்டி, மண்டல இயக்குனர் மோகனன் மற்றும் பலர் பங்கேற்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...