மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 440 காலிப் பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) மத்திய அரசுத்
துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி
வருகிறது. தற்போது என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களை நடத்த ‘என்ஜினீயரிங்
சர்வீசஸ் எக்ஸாம்–2017’ எனும் தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம்
உத்தேசமாக 440 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரெயில்வே, ரெயில்வே ஸ்டோர்கள், இந்திய ராணுவ தொழிற்சாலைகள், மத்திய
சாலைப் பணிகளுக்கான பிரிவு, நில அளவைத்துறை, எல்லையோர சாலைப் பணிகள் துறை,
பாதுகாப்பு சேவைப் பணிகள், கடற்படை, மிலிடரி என்ஜினீயரிங் சேவைப் பணிகள்
சர்வேயர் மற்றும் மத்திய பொது என்ஜினீயரிங் சேவைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு
மத்திய அரசு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. சிவில், மெக்கானிக்கல்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில்
இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...